மனைவி, மகனை பார்த்து நடிகர் தர்ஷன் கண்ணீர்
மனைவி, மகனை பார்த்து நடிகர் தர்ஷன் கண்ணீர்
மனைவி, மகனை பார்த்து நடிகர் தர்ஷன் கண்ணீர்
ADDED : ஜூன் 25, 2024 04:42 AM
பெங்களூரு : தன் ரசிகர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷன், மனைவி, மகனை பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகர் ரேணுகாசாமியை, 33, கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா உட்பட 17 பேர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தர்ஷனை பார்ப்பதற்காக, அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் வினிஷ் ஆகியோர் நேற்று, சிறைக்குச் சென்றனர். தான் கொண்டு வந்திருந்த மதிய உணவை கணவருக்கு விஜயலட்சுமி வழங்கினார்.
எதிர்கொள்வோம்
மனைவி, மகனை பார்த்ததும் தர்ஷன் கண் கலங்கினார். மகனை ஆரத்தழுவிக் கொண்டாராம். மனைவியிடம் கண்ணீர் விட்டு அழுதாராம். சிறிது நேரம் மனம் விட்டுப் பேசி உள்ளனர். அப்போது, 'சட்டப்படி எதிர்கொள்வோம்' என, மனைவி தைரியம் ஊட்டி உள்ளார்.
தோழிக்காக, ரசிகரை கொலை செய்த வழக்கில் சிக்கியும், தற்போது தன்னை பார்த்து தைரியம் ஊட்டிய மனைவியின் செயலையும் நினைத்து, அவர் நெகிழ்ச்சி அடைந்தார். இவர்கள் சென்ற சிற்று நேரத்தில், அவரது நண்பரும், நடிகருமான வினோத் பிரபாகர்; திருநங்கை நட்சத்திரா ஆகியோர் தர்ஷனை சந்தித்து பேசினர்.
சொகுசு வசதிகள்
இதற்கிடையில், அவருக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், குற்றப்பின்னணியில் இருக்கும் பலருடன் தர்ஷன் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தனக்கென தனிக்குழுக்களை உருவாக்கிக் கொண்டுள்ளார்.