Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'டிரெக்கிங்' செல்ல ஏதுவான ஜெனுகல்லு குட்டா மலை

'டிரெக்கிங்' செல்ல ஏதுவான ஜெனுகல்லு குட்டா மலை

'டிரெக்கிங்' செல்ல ஏதுவான ஜெனுகல்லு குட்டா மலை

'டிரெக்கிங்' செல்ல ஏதுவான ஜெனுகல்லு குட்டா மலை

ADDED : ஜூலை 17, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
கர்நாடகாவில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பிரதேச பகுதிகள் பச்சை பசேலென காட்சி அளிக்கின்றன. மலைப்பகுதிகளில் இயற்கை கொஞ்சுகிறது.

இதனால் டிரெக்கிங் செல்பவர்கள் ஏதாவது ஒரு மலையை தேர்ந்தெடுத்து, டிரெக்கிங் செல்ல ஆரம்பித்துள்ளனர். இத்தகையவர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது ஜெனுகல்லு குட்டா மலை.

ஹாசனின் சக்லேஷ்பூரில் இருந்து 80 கி.மீ.,யில், ஜெனுகல்லு குட்டா மலை அமைந்துள்ளது. இந்த மலை சக்லேஷ்பூரில் சுற்றுலா பயணியர் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக உள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால், ஜெனுகல்லு குட்டா மலையை இயற்கையின் பனிப் போர்வை மூடி உள்ளது.

மலையை தொட்டு தழுவியபடி பனிமூட்டம் செல்கிறது. மலையேற்றம் செல்லும்போது, அடர்ந்த வனப்பகுதி பாதைகள், ஆறுகள், உயர மான மலைத்தொடர்களை பார்த்துக் கொண்டு செல்லலாம்.

காலை 6:00 மணிக்கு டரெக்கிங் துவங்குகிறது. அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல 6:00 மணி நேரம் ஆகிறது.

அடிவாரத்தில் இருந்து சிறிது துாரம் மட்டும் படிக்கட்டுகள் இருக்கும். அதன்பின் குறுகலான பாறைகள் மற்றும் செங்குத்தான பாறைகளில் ஏறிச் செல்ல வேண்டும்.

செங்குத்தான பாறைகளில் ஏறும்போது கவனமுடன் ஏற வேண்டும்.

தற்போது மழை பெய்வதால் அட்டைப் பூச்சிகள் அதிகமாக இருக்கும். இதனால் உடல் முழுதையும் மூடும் ஆடைகள் அணிந்து செல்வது நல்லது.

மலை உச்சிக்கு சென்ற பின் சேஷ பர்வதா, குமார பர்வதா மலைகளையும் கண்டு ரசிக்கலாம். டிரெக்கிங் முடித்துவிட்டு திரும்பியபின் தங்குவதற்கு மலை அடிவாரத்தில் விடுதிகளும் உள்ளன.

பெங்களூரில் இருந்து ஜெனுகல்லு குட்டா மலை 300 கி.மீ.,யில் அமைந்துள்ளது.

காரில் சென்றால் நான்கு மணி நேரத்தில் சென்று விடலாம். பெங்களூரில் இருந்து பஸ்சில் செல்பவர்கள் சக்லேஷ்பூர் சென்று அங்கிருந்து வாடகை வாகனங்களை எடுத்துச் செல்லலாம்.

- -நமது நிருபர்- -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us