'நடிகை ரன்யா ராவ் வழக்கில் அமைச்சருக்கு தொடர்பு?'
'நடிகை ரன்யா ராவ் வழக்கில் அமைச்சருக்கு தொடர்பு?'
'நடிகை ரன்யா ராவ் வழக்கில் அமைச்சருக்கு தொடர்பு?'
ADDED : மார் 14, 2025 06:49 AM

ஹூப்பள்ளி: “நடிகை ரன்யா ராவ் வழக்கில் காங்கிரஸ் அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது. அவரை பாதுகாக்கவே, சித்தராமையா அரசு முயற்சித்து வருகிறது,” என, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி 'பகீர்' கிளப்பி உள்ளார்.
ஹூப்பள்ளியில், அவர் கூறியதாவது:
நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில், காங்கிரஸ் அரசு யாரோ ஒருவரை பாதுகாக்க முயற்சிக்கிறது. இந்த வழக்கில் ஒரு அமைச்சர் சம்பந்தப்பட்டுள்ளார். இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
வழக்கின் தீவிரத்தை முதல்வர் மற்றும் துணை முதல்வர் புரிந்து கொண்டு, விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாரையும் பாதுகாக்க முயற்சிகள் செய்ய கூடாது. இந்த தங்கக் கட்டிகள் கடத்தலுக்கு பின், பயங்கரவாத அமைப்புகள் இருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும்.
மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அமைச்சர் ஜமீர் அகமது கான் சொல்வது எல்லாம் சட்டமாக மாறாது. சித்தராமையா முதல்வராக இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அவரை கொள்ளையடிக்க விடமாட்டோம்.
கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., நஷ்டத்தில் இயங்குகின்றன. பஸ்களில் டீசல் நிரப்புவதற்கு கூட காசு இல்லாத சூழ்நிலை உள்ளது. பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மற்ற மாநிலங்களில் இல்லாத வாக்குறுதித் திட்ட அமலாக்கக் குழு அமைக்கப்பட்டதற்கான காரணம் என்ன? இதுகுறித்து ராகுல் பேச வேண்டும். 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.