ADDED : ஜூன் 20, 2024 02:08 AM
புதுடில்லி:டில்லி ராணுவ மருத்துவமனையில் முதல் முறையாக, தோல் வங்கியை ராணுவ அமைச்சகம் அறிமுகப் படுத்திஉள்ளது.
இதன் வாயிலாக, ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த தோல் வங்கி, நாடு முழுதும் உள்ள அனைத்து ராணுவ மருத்துவமனைகளுக்கும், தோல்களை சேகரித்தல், பதப்படுத்துதல், சேமித்தல் மற்றும் வினியோகிக்கும் முக்கிய மையமாக விளங்கும்.
இந்த வங்கியில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், திசு பொறியாளர்கள்மற்றும் சிறப்பு தொழில்நுட்ப வல்லுனர்கள் உட்பட உயர் பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு பணியாற்றும்.
இங்கு நிலையான மற்றும் நம்பகமான சிகிச்சை அளிக்கப்படும் என ராணுவ அமைச்சகம் தெரிவித்து உள்ளது.