மலை மஹாதேஸ்வரா கோவில் வருவாய் அதிகரிப்பு
மலை மஹாதேஸ்வரா கோவில் வருவாய் அதிகரிப்பு
மலை மஹாதேஸ்வரா கோவில் வருவாய் அதிகரிப்பு
ADDED : ஜூன் 29, 2024 11:07 PM

சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் ஹனுாரில் மலை மஹாதேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில், பசுமை நிறைந்த பகுதிகளுக்கு இடையே உள்ளது. தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
கர்நாடகாவின் கோடிக்கணக்கான வருவாய் பெறும் பணக்கார கோவில்களில், இதுவும் ஒன்று. கொரோனா தொற்று பரவல் இருந்தபோது, ஒன்றிரண்டு ஆண்டுகள் வருவாய் குறைவாக இருந்தது.
அதன்பின் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு, கோவில் உண்டியல் எண்ணப்பட்டது. 2.58 கோடி ரூபாய்க்கும் அதிகமான காணிக்கை வசூலானது.
மலை மஹாதேஸ்வரா மலையின் பஸ் நிலையம் அருகில் உள்ள, வர்த்தக வளாகத்தில் நேற்று முன் தினம் கண்காணிப்பு கேமரா பாதுகாப்புடன் கோவில் உண்டியல் எண்ணப்பட்டது. இரவு 7:00 மணி வரை நடந்தது. உண்டியலில் 2 கோடியே 20 லட்சத்து 97,533 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகி இருந்தது.
இது தவிர 106 கிராம் தங்கம், 2.100 கிலோ வெள்ளி பொருட்கள், 3,38,830 வெளிநாட்டு நோட்டுகள், மூன்று டாலர்கள், நேபாள், அரபு, உமத் நாட்டின் தலா ஒரு நோட்டுகள் இருந்தன. புழக்கத்தில் இல்லாத 2,000 ரூபாய் மதிப்புள்ள 19 நோட்டுகளும் உண்டியலில் போட்டுள்ளனர்.
அரசு 'சக்தி' திட்டத்தை செயல்படுத்திய பின், மலை மஹாதேஸ்வரா மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் காணிக்கையும் அதிகரிக்கிறது.