எஸ்.ஐ.டி., என்றால் சித்தராமையா விசாரணை குழு முதல்வர் மீது பா.ஜ., 'மாஜி' எம்.எல்.ஏ., தாக்கு
எஸ்.ஐ.டி., என்றால் சித்தராமையா விசாரணை குழு முதல்வர் மீது பா.ஜ., 'மாஜி' எம்.எல்.ஏ., தாக்கு
எஸ்.ஐ.டி., என்றால் சித்தராமையா விசாரணை குழு முதல்வர் மீது பா.ஜ., 'மாஜி' எம்.எல்.ஏ., தாக்கு
ADDED : ஜூலை 23, 2024 06:09 AM

தாவணகெரே: ''வால்மீகி ஆணைய முறைகேடு வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கக் கூறினால், எஸ்.ஐ.டி.,யிடம் முதல்வர் ஒப்படைத்துள்ளார். எஸ்.ஐ.டி., என்றால் சித்தராமையா விசாரணை குழு,'' என, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யா தெரிவித்தார்.
தாவணகெரேயில் நேற்று முன்தினம் அவர் அளித்த பேட்டி:
வால்மீகி ஆணையம் முறைகேட்டை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினால், பா.ஜ., ஆட்சியில் 22 முறைகேடுகள் நடந்ததாகக் கூறுகிறார். அதிகாரம் உங்கள் கையில் இருக்கும்போது, விசாரணை நடத்த வேண்டியது தானே.
அதை விடுத்து, வால்மீகி ஆணைய முறைகேட்டை, எஸ்.ஐ.டி., விசாரணைக்கு அளித்துள்ளார். அவர்கள் விசாரணை நடத்தி, முன்னாள் அமைச்சர் நாகேந்திராவுக்கு 'கிளீன் சிட்' அறிக்கை கொடுத்துள்ளனர். இது சிறப்பு விசாரணை குழு விசாரணையல்ல, எஸ்.ஐ.டி., என்றால், சித்தராமையா விசாரணை குழு நடத்திய விசாரணை.
காங்கிரஸ் அரசோ, பா.ஜ., மீது பொய் குற்றச்சாட்டு, வாக்குறுதி அளிக்கிறது. வாக்குறுதித் திட்டங்களுக்காக எஸ்.சி., நல ஆணைய பணத்தை பயன்படுத்துகிறது.
கர்நாடகாவில் மக்கள் விரோத அரசு உள்ளது. 15 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், பெரும்பாலான விளை நிலங்கள் நீரில் மூழ்கி, நாசமாகி உள்ளன. விவசாயிகளின் நலனில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்.
மழையால் வீடுகளை இழந்தவர்கள், வாடகை வீட்டில் வசிக்க உதவி செய்து வருகிறோம்.
எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, வீடுகள் இழந்தவர்களுக்கு 50,000 ரூபாயும்; உணவு தானியங்கள் வாங்க 10,000 ரூபாயும் நிவாரணம் வழங்கினார்.
இவ்வாறு அவர் கூறினார்.