தீத்தடுப்பு விதிகளை பின்பற்ற ஹோட்டல்களுக்கு உத்தரவு
தீத்தடுப்பு விதிகளை பின்பற்ற ஹோட்டல்களுக்கு உத்தரவு
தீத்தடுப்பு விதிகளை பின்பற்ற ஹோட்டல்களுக்கு உத்தரவு
ADDED : ஜூன் 06, 2024 11:19 PM
புதுடில்லி:நகரில் தீ விபத்துகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஹோட்டல்கள், ரெஸ்டோ பார்கள், கிளப்புகள், மதுபானங்களை விற்பனை செய்யும் பாண்டட் கிடங்குகளில் முறையான தீ பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, டில்லி அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு டில்லியில் கடந்த மாதம் ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பச்சிளங்குழந்தைகள் பலியாகின. இதுபோன்று நகரில் தினமும் தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த விபத்துகளைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே உள்ள கலால் துறை விதிகளின்படி, 90 சதுர மீட்டரும் அதற்கு மேல் பரப்பளவு கொண்ட உணவகங்கள், ரெஸ்டாரண்ட்கள், பார்களுக்கு தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்று கட்டாயம்.
தற்போது 90 சதுர மீட்டருக்கும் குறைவான பார்கள், ரெஸ்டாரண்ட்கள், ரெஸ்டோ பார்கள், தீத்தடுப்பு உபகரணங்கள் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வதை கட்டாயமாக்கி, கலால் துறை புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கலால் துறையின் தரவுகளின்படி, நகரத்தில் 1,000 ரெஸ்ட்ரோபார்கள், ஹோட்டல், கிளப், உணவகங்கள் உள்ளன. இவற்றில் 165 ஹோட்டல்கள், 50 கிளப்புகள் கலால் துறையிடம் உரிமம் பெற்றவை. மற்றவை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.