நெடுஞ்சாலையில் கொள்ளை; 2 சிறுவர் உட்பட ஐவர் கைது
நெடுஞ்சாலையில் கொள்ளை; 2 சிறுவர் உட்பட ஐவர் கைது
நெடுஞ்சாலையில் கொள்ளை; 2 சிறுவர் உட்பட ஐவர் கைது
ADDED : ஜூன் 11, 2024 11:58 PM
தாவணகெரே : துமகூருக்கு சென்று கொண்டிருந்த சரக்கு லாரியில் இருந்து ரொக்கம், மொபைல் போனை திருடி சென்ற நெடுஞ்சாலை கொள்ளையர்களை, சினிமா பாணியில் துரத்தி சென்ற போலீசார், இரு சிறுவர் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.
ஹாவேரி மாவட்டம், படகியை சேர்ந்தவர் சந்தீப் சிவனகவுடா ஹிரேகவுடா.
லாரி ஓட்டுனரான இவர், கடந்த 7ம் தேதி புனே - பெங்களூரு வழியாக துமகூரு சென்று கொண்டிருந்தார்.
தாவணகெரே மாவட்டம், எச்.கலப்பனஹள்ளி அருகே நெடுஞ்சாலையில் மதிய உணவுக்காக லாரியை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, உணவு சாப்பிட சென்றார்.
அந்நேரத்தில், காரில் வந்த கொள்ளையர்கள், லாரியில் இருந்த சந்தீப்பின் மொபைல் போன், 1,200 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டிருந்தனர்.
அந்நேரத்தில் வந்த ரோந்து போலீசாரை பார்த்த கொள்ளையர்கள், காரில் ஏறி தப்பினர். அவர்களை பின் தொடர்ந்த போலீசார், பல கி.மீ., துாரம் விரட்டி சென்று பிடித்தனர்.
அவர்களை பிடித்து விசாரித்த போது, கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, குஷால், 20, வெங்கடேஷ், 19, கிரண் குமார், 19, கைது செய்யப்பட்டனர். இரு சிறுவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.
இவர்களிடம் இருந்து மொபைல் போன், 1,200 ரூபாய் ரொக்கம், 1.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.