ஹேமந்த் சோரன் ஜாமின் ரத்தாகுமா: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
ஹேமந்த் சோரன் ஜாமின் ரத்தாகுமா: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
ஹேமந்த் சோரன் ஜாமின் ரத்தாகுமா: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
ADDED : ஜூலை 28, 2024 10:14 PM

புதுடில்லி : ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கிய ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஈடி தாக்கல் செய்துள்ள மனு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.
நில மோசடியில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கும் படி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட் முறைப்படி ஐகோர்ட்டில் மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தியது.
இதனையடுத்து ஜார்கண்ட் மாநில ஐகோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்தார் ஹேமந்த் சோரன். கடந்த ஜூன் மாதம் 28 ம் தேதி ஐகோர்ட் ஜாமின் மனு வழங்கியது. ஐந்து மாதங்களுக்கு பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த சோரன் ஜூலை 4-ம் தேதி மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில் சோரனுக்கு ஜாமின் வழங்கியதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை ( 29-ம் தேதி) நீதிபதிகள் பி.ஆர் கவை மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது.