டில்லியில் விடிய விடிய கனமழை: விமானநிலைய முகப்பு கூரை இடிந்து விபத்து
டில்லியில் விடிய விடிய கனமழை: விமானநிலைய முகப்பு கூரை இடிந்து விபத்து
டில்லியில் விடிய விடிய கனமழை: விமானநிலைய முகப்பு கூரை இடிந்து விபத்து
UPDATED : ஜூன் 28, 2024 05:36 PM
ADDED : ஜூன் 28, 2024 06:55 AM

புதுடில்லி: டில்லியில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.
டில்லியில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று( ஜூன் 27) இரவு முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததுடன், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். நேற்று காலை முதல் இன்று காலை 8:30 மணி வரையில் டில்லியில் 228 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. 1936க்கு பிறகு அதிகபட்ச மழைப்பொழிவை டில்லி சந்தித்து உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
விமானநிலையத்தில் விபத்து
டில்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக விமானநிலையத்தின் முகப்பு கூரை இடிந்து விழுந்தது. விபத்து காரணமாக விமானநிலைய வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. இதில், ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்தனர்.