டில்லி மக்களை பாடாய் படுத்தும் வெயில்: 5 பேர் பலி; 12 பேர் நிலைமை மோசம்
டில்லி மக்களை பாடாய் படுத்தும் வெயில்: 5 பேர் பலி; 12 பேர் நிலைமை மோசம்
டில்லி மக்களை பாடாய் படுத்தும் வெயில்: 5 பேர் பலி; 12 பேர் நிலைமை மோசம்
ADDED : ஜூன் 19, 2024 04:52 PM

புதுடில்லி: வெயில் காரணமாக, 5 பேர் டில்லி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் உள்ள 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
நாடு முழுவதும் கோடை காலம் இன்னும் முடிவடையாமல், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. டில்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
டில்லியில் 45 டிகிரி செல்சியஸ் (113 பாரன்ஹீட்) வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்னும் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. டில்லியில் பகலில் வெயிலின் கொடுமை போக, இரவிலும் வெக்கை நீடிக்கிறது.
இந்நிலையில், இன்று(ஜூன் 19) வெயில் காரணமாக, 5 பேர் டில்லி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் உள்ள 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 22 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெயிலால் பெரும்பாலும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.