Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மகளிர் ஆணையத்தின் கட்டமைப்பு அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம்

மகளிர் ஆணையத்தின் கட்டமைப்பு அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம்

மகளிர் ஆணையத்தின் கட்டமைப்பு அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம்

மகளிர் ஆணையத்தின் கட்டமைப்பு அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம்

ADDED : ஜூலை 31, 2024 01:55 AM


Google News
இந்தியா கேட்:டில்லி மகளிர் ஆணையத்தின் செயல்பாடு குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, டில்லி மாநில அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாங்கள் பணிநீக்கம் செய்யப்படும் மகளிர் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 49 பணியாளர்கள் கடந்த ஏப்ரலில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி சஞ்சீவ் நருலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மகளிர் ஆணையத்தின் செயல்பாடு குறித்து உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இதுதொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

பிபவ்குமார் மீதான

குற்றப்பத்திரிகை ஏற்புபுதுடில்லி, ஜூலை 31-முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், கடந்த மே 13ம் தேதி முதல்வரின் தனிச்செயலர் பிபவ்குமாரால் தான் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சுவாதி மாலிவால் குற்றஞ்சாட்டினார்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பிபவ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஜூலை 16ம் தேதி 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.இந்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நேற்று, மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கவுரவ் கோயல் அறிவித்தார். ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.குற்றம் சாட்டப்பட்டுள்ள பிபவ் குமாருக்கு குற்றப்பத்திரிகையின் நகலை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.குற்றப்பத்திரிகையில் 50 சாட்சிகளின் வாக்குமூலங்களும் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை


ஆக., 12ல் பரிசீலினைரோஸ் அவென்யூ, ஜூலை 31-மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ., நேற்று முன்தினம் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.இந்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா என்பது குறித்து வரும் ஆகஸ்ட் 12ம் தேதி சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்துவதாக நேற்று அறிவித்தது.குற்றப்பத்திரிகையை ஆதரிக்கும் ஆவணங்களை சி.பி.ஐ., சமர்ப்பிக்கவில்லை என குறிப்பிட்டு, சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா இந்த வழக்கை ஒத்திவைத்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us