'ஹேக்கர்' ஸ்ரீகிருஷ்ணா காதலிக்கு 'சம்மன்'
'ஹேக்கர்' ஸ்ரீகிருஷ்ணா காதலிக்கு 'சம்மன்'
'ஹேக்கர்' ஸ்ரீகிருஷ்ணா காதலிக்கு 'சம்மன்'
ADDED : ஜூன் 07, 2024 07:17 AM
பெங்களூரு: 'பிட்காயின்' வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு 'ஹேக்கர்' ஸ்ரீகிருஷ்ணாவின் காதலிக்கு, சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பி உள்ளது.
பெங்களூரு ஜெயநகரை சேர்ந்தவர் ஸ்ரீகிருஷ்ணா என்ற ஸ்ரீகி, 29. கடந்த 2020ல் ஹைட்ரோ கஞ்சா விற்ற வழக்கில், குமாரசாமி லே - அவுட் போலீசார் கைது செய்தனர். அரசுக்கு சொந்தமான இணையதளங்களை முடக்கி, பல கோடி ரூபாயை சுருட்டியது விசாரணையில் தெரிந்தது.
மேலும் பல நிறுவனங்களின் சர்வர்களை முடக்கி, பிட்காயின்களை திருடியதும் தெரியவந்தது. விசாரணையின் போதே அவர், திடீரென விடுவிக்கப்பட்டார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், பிட்காயின் வழக்கு குறித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது.
இந்நிலையில் துமகூரில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தில், 2017ல் சர்வரை முடக்கி 32.48 கோடி ரூபாய் மதிப்பிலான, பிட்காயின்களை திருடிய வழக்கில், கடந்த மாதம் ஸ்ரீகிருஷ்ணா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராஜஸ்தானை சேர்ந்த காதலி பூஜா பட்டிற்கு, கார், பிளாட், விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி கொடுக்க, சர்வர்களை முடக்கி பிட்காயின்களை திருடியதை ஒப்பு கொண்டார்.
இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி, பூஜா பட்டிற்கு, சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று முன்தினம் சம்மன் அனுப்பி உள்ளனர்.