பேயை விரட்டுவதாக சிறுமி பலாத்காரம்; மதகுரு கைது
பேயை விரட்டுவதாக சிறுமி பலாத்காரம்; மதகுரு கைது
பேயை விரட்டுவதாக சிறுமி பலாத்காரம்; மதகுரு கைது
ADDED : ஜூன் 04, 2024 04:08 AM
சித்ரதுர்கா : பேயை விரட்டுவதாக கூறி, சிறுமியை பலாத்காரம் செய்த, மதகுருவை போலீசார் கைது செய்து உள்ளனர்.
சித்ரதுர்கா டவுனில் வசிக்கும் முஸ்லிம் தம்பதிக்கு 14 வயது மகள் உள்ளார். இந்த சிறுமிக்கு ஏழு மாதங்களுக்கு முன்பு, உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிறுமியை, பெற்றோர் பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மதகுருவாக இருக்கும் அப்துல் ரகுமான், 45, என்பவர், சிறுமியின் பெற்றோரிடம், “உங்கள் மகளுக்கு பேய் பிடித்து உள்ளது. வீட்டில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும்,” என கூறினார்.
சிறுமியின் வீட்டிற்கும் சென்றார். ஒரு அறையில் சிறுமியையும், அவரது சகோதரனையும் அடைத்தார்.
பூஜை செய்வதாக கூறி, சிறுமியின் பெற்றோரை வெளியே அனுப்பி வைத்தார். அதன்பின் சிறுமியின் அண்ணனிடம், “உனது தங்கைக்கு பேய் பிடித்துள்ளது. நீங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தால் தான், உடலை விட்டு பேய் வெளியே செல்லும்,” என்று கூறி உள்ளார்.
இதனால் சிறுமியுடன், அவரது அண்ணன் உல்லாசமாக இருந்து உள்ளார். இதை அப்துல் ரகுமான் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை காட்டி மிரட்டி, கடந்த ஏழு மாதங்களாக, சிறுமியை மதகுரு பலாத்காரம் செய்து உள்ளார்.
இதுபற்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சிறுமி, பெற்றோரிடம் கூறினார்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அப்துல் ரகுமான் மீது, சித்ரதுர்கா மகளிர் போலீசில் புகார் செய்தனர். நேற்று முன்தினம் இரவு அவர் கைது செய்யப்பட்டார்.