சிறுமி பலாத்கார வழக்கு; 2 வாலிபருக்கு '30 ஆண்டு'
சிறுமி பலாத்கார வழக்கு; 2 வாலிபருக்கு '30 ஆண்டு'
சிறுமி பலாத்கார வழக்கு; 2 வாலிபருக்கு '30 ஆண்டு'
ADDED : ஜூன் 11, 2024 10:38 PM
கொப்பால் : சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், இருவருக்கு தலா 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கலபுரகி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.
கலபுரகி டவுன் மில்லத் நகரை சேர்ந்தவர்கள் சையது அமன் அலி, 23, சையது தலாஹா நுமன், 23. இருவரும் நண்பர்கள். 2020ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி, மில்லத் நகர் அருகே பிலாலாபாத் காலனிக்கு இருவரும் சென்றனர்.
ஒரு வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை, நண்பர்கள் இருவரும் பலாத்காரம் செய்தனர். சிறுமியை நிர்வாணமாக மொபைல் போனில் வீடியோவும் எடுத்தனர். 'வெளியே சொன்னால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம்' என மிரட்டினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்தார். புகாரின்படி கலபுரகி மகளிர் போலீசார், இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது, கலபுரகி மகளிர் நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
நான்கு ஆண்டுகளாக நடந்த விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி யமனப்பா பம்மனாகி நேற்று தீர்ப்பு கூறினார். சையது அமன் அலி, சையது தலாஹா நுமனுக்கு தலா 30 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 20,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
'பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில சட்ட சேவைகள் ஆணையம், 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' எனவும் உத்தரவிட்டார்.