இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளரானார் கவுதம் காம்பீ்ர்
இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளரானார் கவுதம் காம்பீ்ர்
இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளரானார் கவுதம் காம்பீ்ர்
ADDED : ஜூலை 09, 2024 08:13 PM

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளாக முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட் நடந்து முடிந்த டி-20 உலக கோப்பை தொடருடன் ஒய்வு பெற்றார்.
இதையடுத்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று (09.07.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில். இந்திய தலைமை புதிய பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி பற்றிய பார்வை, தனது அனுபவம் மூலம் தலைமை பயிற்சியாளர் இடத்திற்கு வந்துள்ளார். இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்தும் சிறந்த நபர் கவுதம்காம்பீர் என நம்புகிறேன். இவ்வாறு ஜெய் ஷா கூறியுள்ளார்.