இத்தாலியில் காந்தி சிலை சேதம் காலிஸ்தானியர்கள் அட்டூழியம்
இத்தாலியில் காந்தி சிலை சேதம் காலிஸ்தானியர்கள் அட்டூழியம்
இத்தாலியில் காந்தி சிலை சேதம் காலிஸ்தானியர்கள் அட்டூழியம்
ADDED : ஜூன் 13, 2024 12:58 AM
ரோம், இத்தாலியில் நடக்கும் ஜி - 7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள நிலையில், அங்குள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
ஐரோப்பிய நாடான இத்தாலியின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் ஜி - 7 உறுப்பு நாடுகளின் உச்சி மாநாடு இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடியுடன் நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான குழுவும் இந்த மாநாட்டுக்கு இன்று புறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட 12 நாடுகளின் தலைவர்கள் ஜி - 7 மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்நிலையில், இங்குள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று சேதப்படுத்தியுள்ளனர்.
திறக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே சேதப்படுத்தப்பட்ட சிலை அருகே, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை தொடர்பான சர்ச்சைக்குரிய வாசகங்களை அவர்கள் எழுதி வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான சுவரொட்டிகளையும் அப்பகுதியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வீசிவிட்டு சென்றுள்ளனர்.