அரசு பள்ளி மாணவியரை மிரட்டி பலாத்காரம் செய்த முன்னாள் மாணவர்
அரசு பள்ளி மாணவியரை மிரட்டி பலாத்காரம் செய்த முன்னாள் மாணவர்
அரசு பள்ளி மாணவியரை மிரட்டி பலாத்காரம் செய்த முன்னாள் மாணவர்
ADDED : ஜூலை 10, 2024 04:16 AM
மாண்டியா : ஆபாச வீடியோக்களை பெற்றோருக்கு அனுப்பி விடுவதாகக் கூறி, அரசு பள்ளி மாணவியரை மிரட்டி பலாத்காரம் செய்த, அப்பள்ளியின் முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டார்.
மாண்டியா மேலுகோட்டே பகுதியைச் சேர்ந்தவர் யோகி, 30. இவர் மேலுகோட்டே அரசு பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார்.
யோகிக்கு ஓவியங்கள் வரைய தெரியும். சில மாதங்களுக்கு முன்பு, அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று, 'மாணவர்களுக்கு இலவசமாக ஓவியம் வரைய சொல்லித் தருகிறேன்' என்று கூறியுள்ளார்.
இதற்கு தலைமை ஆசிரியரும் சம்மதம் தெரிவித்தார். அதன் பின்னர், தினமும் மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவ, மாணவியருக்கு ஓவியம் வரைய, யோகி சொல்லிக் கொடுத்துள்ளார்.
அப்போது விளையாட்டின் மீது ஆர்வம் உள்ள, சில மாணவியரை பற்றி, அவருக்கு தெரிய வந்தது.
அந்த மாணவியரிடம் சென்று, 'உங்களுக்கு பல விளையாட்டுகளை சொல்லித் தருகிறேன்' என கூறியுள்ளார்.
இதை நம்பிய மாணவியரும், யோகியுடன் சகஜமாக பழகி உள்ளனர். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் முன்பு, அறைக்குச் சென்று மாணவியர் உடை மாற்றுவதை, யோகி மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவை, மாணவியரிடம் காண்பித்து, 'என்னுடன் உல்லாசமாக இருக்க வர வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஆபாச வீடியோக்களை உங்கள் பெற்றோருக்கு அனுப்பி வைப்பேன்' என்று மிரட்டி, மாணவியரை பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
யோகியால் பாதிக்கப்பட்ட நான்கு மாணவியர், மேலுகோட்டே போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தனர். யோகி கைது செய்யப்பட்டார்.
அவரது மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டது.