ரிஷிகேஷ்-ஐ பிகினியால் மினி கோவா ஆக மாற்றி வரும் வெளிநாட்டு பக்தர்கள்
ரிஷிகேஷ்-ஐ பிகினியால் மினி கோவா ஆக மாற்றி வரும் வெளிநாட்டு பக்தர்கள்
ரிஷிகேஷ்-ஐ பிகினியால் மினி கோவா ஆக மாற்றி வரும் வெளிநாட்டு பக்தர்கள்
UPDATED : ஜூலை 07, 2024 08:34 PM
ADDED : ஜூலை 07, 2024 08:28 PM

ஹரித்தவார்:கங்கா மலைப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பகினி உடையில் சென்றுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கோவா மாநிலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கபுரி. கோவா கடற்கரையில் பிகினி உடைகளுடன் வலம் வருவது சகஜமாக கருதப்படுகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ரிஷிகேஷ் இந்தியர்களின் புண்ணிய ஸ்தலங்களில் முக்கிய இடமாக கருதப்படுகிறது. அங்கு பாயும் கங்கை நதியில் நீராடுவது இந்துக்களின் பழக்க வழக்கங்களில் ஒன்றாகும். ஆன்மிக சுற்றுலாவாக இருந்து வரும் இந்த இடம் தற்போது மினி கோவா ஆக மாறி வருகிறதோ என கேள்வி எழும் நிலை ஏற்பட்டுள்ளது.
'புனித கங்கையை கோவா கடற்கரையாக மாற்றியதற்காக @pushkardhamiக்கு நன்றி' என்ற தலைப்புடன் வெளியாகி உள்ள வீடியோ எக்ஸ் வலை தளத்தில் வைரலாகி வருகிறது.
புனித கங்கையை கோவா கடற்கரையாக மாற்றியதற்காக @pushkardhamiக்கு நன்றி. இதுதான் இப்போது ரிஷிகேஷில் நடக்கிறது, விரைவில் அது ஒரு மினி பாங்காக் ஆகிவிடும்' ரிஷிகேஷ் இனி மதம், ஆன்மீகம் மற்றும் யோகாவின் நகரம் அல்ல. அது கோவாவாக மாறிவிட்டது எனவும், இது போன்ற கலசாச்சாரம் எவ்வாறு ஊக்குவிக்கப்படுகிறது. என பதிவிடப்பட்டு உள்ளது.
இந்த வீடியோ குறித்து கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
உத்தரகாண்டில் சுற்றுலா என்ற பெயரில் என்ன வகையான ஆபாசத்தை அனுமதித்தீர்கள்? எனவும்
'இங்கே எந்தத் தவறும் இல்லை. உங்களுக்கு ஆடையில் பிரச்சனை என்றால், உங்கள் வளர்ப்பில் சிக்கல் உள்ளது. பர்தா அல்லது முழு உடையில் தங்கள் மனைவியை கடற்கரைக்கு அழைத்துச் செல்லும் அடிப்படை வாதிகளை போல நடந்து கொள்ளாதீர்கள். எனவும் பதிவிட்டு வருகின்றனர்.