எய்ம்ஸ் மருத்துவமனையில் விரைவில் வெளிநோயாளிகள் பிரிவு : ஜெ.பி.,நட்டா
எய்ம்ஸ் மருத்துவமனையில் விரைவில் வெளிநோயாளிகள் பிரிவு : ஜெ.பி.,நட்டா
எய்ம்ஸ் மருத்துவமனையில் விரைவில் வெளிநோயாளிகள் பிரிவு : ஜெ.பி.,நட்டா
UPDATED : ஜூலை 07, 2024 09:56 PM
ADDED : ஜூலை 07, 2024 09:44 PM

புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துவக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் விரைவில் வெளிநோயாளிகள் பிரிவு துவங்கப்படும் என மத்திய அமைச்சர் ஜெ.பி.,நட்டா கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.அதனை முன்னிட்டு இரண்டு நாள் பயணமாக ஜம்முவிற்கு சென்றுள்ள ஜெ.பி.,நட்டா அங்குள்ள பா.ஜ., தலைவர்களை சந்தித்து பேசினார்.
ஜம்மு மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் புதிதாக கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை துவக்கி வைத்தார். அதனை பார்வையிட்ட பின்னர் ஜெ.பி.,நட்டா கூறுகையில் இங்குள்ள வசதிகளைப் பார்த்த பிறகு, ஜம்மு எய்ம்ஸ் எப்படி முன்னேறி வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன் என்றார். எய்ம்ஸ் ஜம்மு இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக மாறியுள்ளது .பிரதமர் நரேந்திர மோடியால் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்ட தனித்துவமான பரிசுகளில் இதுவும் ஒன்று.
நாடு முழுவதும் 22 எய்ம்ஸ்கள் உள்ளன, அவை உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பை வழங்குகின்றன.தற்போது துவங்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் ஜம்மு-காஷ்மீர் மக்கள் சிகிச்சைக்காக பிஜிஐ சண்டிகர், அமிர்தசரஸ் அல்லது டெல்லிக்கு செல்ல வேண்டியதில்லை. விரைவில் வெளி நோயாளிகள் பிரிவும் துவங்கப்படும்.இவ்வாறு நட்டா கூறினார்.
கடந்த 2019 அன்று, ஜம்மு காஷ்மீரில் இருந்து சட்டப்பிரிவு 370 ஐ பார்லி., ரத்து செய்ததுடன் அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. மேலும் ஜம்மு காஷ்மீரில் சரியான நேரத்தில் சட்டசபை தேர்தலை நடத்தி, மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என கூறப்பட்டது. அதே நேரத்தில், செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து இந்த ஆண்டு செப்டம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.