சிக்கிமில் வெள்ளம் இரண்டு பேர் பலி
சிக்கிமில் வெள்ளம் இரண்டு பேர் பலி
சிக்கிமில் வெள்ளம் இரண்டு பேர் பலி
ADDED : ஜூன் 11, 2024 12:58 AM
கேங்டாக்,வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் நமச்சி மாவட்டத்தின் மஜுவா கிராமத்தில் நேற்று திடீரென பலத்த மழை பெய்தது. இதைத் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எதிர்பாராதவிதமாக அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
தகவலறிந்து வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கி தவித்தவர்களை மீட்டனர். எனினும், வெள்ளத்தில் சிக்கி இரண்டு பேர் பலியாகினர். மற்றொரு நபர் மாயமானார். இதுதவிர, பெண் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.