மகாராஷ்டிராவில் தலைமை செயலாளராக முதல் பெண் நியமனம்
மகாராஷ்டிராவில் தலைமை செயலாளராக முதல் பெண் நியமனம்
மகாராஷ்டிராவில் தலைமை செயலாளராக முதல் பெண் நியமனம்
ADDED : ஜூன் 30, 2024 08:17 PM

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைமை செயலாளராக சுஜாதா சவுனிக் என்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மாநிலத்தின் தலைமை செயலாளராக இருந்து வந்த நிதின் கரீர் ஓய்வு பெற்றார். இதனையடுத்து அப்பதவிக்கு சுஜாதா சவுனிக் என்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சுஜாதாசவுனிக் 1987-ம்ஆண்டு பேட்சை சேர்ந்தவர். இவர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெறுவதற்கு முன்பு ஒரு வருடம் பதவியில் இருப்பார் என கூறப்படுகிறது. இவரது கணவர் மனோஜ் சவுனிக். இவரும் மாநிலத்தின் முன்னாள் தலைமை செயலாளராக இருந்துள்ளார்.
30 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றுள்ள சுஜாதா சவுனிக் சுகாதாரம், நிதி, கல்வி, பேரிடர் மேலாண்மை, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் மற்றும் சர்வதேச அமைப்புகளிலும் நிர்வாக சேவையில் இந்தியாவின் சார்பில் பணி புரிந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்டு 64 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதன் முறையாக தலைமை செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.