நிரம்பியது மதகதா ஏரி விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பியது மதகதா ஏரி விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பியது மதகதா ஏரி விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 27, 2024 05:10 AM

சிக்கமகளூரு : கடூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும், மதகதா ஏரி நிரம்பி உடைப்பெடுத்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிக்கமகளூரின், கடூரில் உள்ள மதகதா ஏரியில் இருந்து, கடூர், பீருர் உட்பட, பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
சிக்கமகளூரு மாவட்டத்தில், பரவலாக மழை பெய்வதால், ஆறு, குளம், ஏரிகள், கால்வாய்கள், அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
ஆயிரக்கணக்கான விவசாயிகள், மக்களின் உயிர்நாடியான மதகதா ஏரியும் நிரம்பி, நேற்று உடைப்பெடுத்து பாய்ந்தது.
இந்த ஏரி வரலாற்று சிறப்பு மிக்கதாகும். ஒவ்வொரு ஆண்டும் வெள்ளிக்கிழமை அன்றே, ஏரி நிரம்பி உடைப்பெடுப்பது இதன் மற்றொரு சிறப்பாகும்.
அதே போன்று வெள்ளிக்கிழமையான நேற்று ஏரி உடைப்பெடுத்ததால், நல்ல சகுனம் என, மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
தண்ணீர் நிரம்பி ததும்பும் மதகதா ஏரியை காண, சுற்றுப்புற கிராமத்தினர் கூட்டம், கூட்டமாக வருகின்றனர். போட்டோ, வீடியோ எடுக்கின்றனர். ஏரிப்பகுதி 'செல்பி ஸ்பாட்'டாக மாறிஉள்ளது.