ADDED : ஜூலை 12, 2024 06:54 AM
கோலார்: மஞ்சலி கிராமத்தின் தம்பதி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கோலார், மாலுாரின், மஞ்சலி கிராமத்தில் வசித்தவர் லட்சுமண், 38. இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றினார். இவரது மனைவி மாலாஸ்ரீ, 35.
அரசு தொடக்கப் பள்ளியில், மதிய உணவு திட்டத்தின் சமையல் உதவியாளராக பணியாற்றினார்.
தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதிக்குள் அவ்வப்போது தகராறு நடந்தது. இதனால் மனம் நொந்த இவர்கள், நேற்று காலை மஞ்சலி கிராமத்தின் அருகில் உள்ள மரத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
வேமகல் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.