தேசிய நெடுஞ்சாலை சுற்றுலா 'பாய்ன்ட்'டில் ஆக்கிரமிப்பு
தேசிய நெடுஞ்சாலை சுற்றுலா 'பாய்ன்ட்'டில் ஆக்கிரமிப்பு
தேசிய நெடுஞ்சாலை சுற்றுலா 'பாய்ன்ட்'டில் ஆக்கிரமிப்பு
ADDED : ஜூன் 15, 2024 07:08 AM

மூணாறு : கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்திய பிறகு வழி நெடுகிலும் அதிகரித்த சுற்றுலா 'பாய்ன்ட்' டுகள் போன்று ஆக்கிரமிப்புகளும் அதிகரித்தன.
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, போடிமெட்டு இடையே ரோடு இருவழிச் சாலையாக அகலப்படுத்தப்பட்டு ஜன.5 ல் அதிகாரபூர்வமாக பயன்பாட்டிற்கு வந்தது. மூணாறு, போடிமெட்டு இடையே 42 கி.மீ., தூரத்தில் பூப்பாறை வரையிலான 32 கி.மீ., தூரம் பச்சை, பசேல் என பறந்து கிடக்கும் தேயிலை தோட்டங்களுக்கு இடையே ரோடு கடந்து செல்கிறது. உலக தரத்தை மிஞ்சும் வகையில் அமைக்கப்பட்ட ரோடு சுற்றுலா பயணிகள் உள்பட அனைவரையும் வசீகரிப்பதால் வழி நெடுகும் சுற்றுலா 'பாய்ன்ட்' டுகளாக மாறி வருகின்றன.
முதலில் லாக்காடு, கேப்ரோடு, பெரியகானல், ஆனயிறங்கல் ஆகிய பகுதிகள் மட்டும் சுற்றுலா பாய்ண்ட்டுகளாக இருந்தன.
அதிகரிப்பு: சுற்றுலா பாய்ன்ட்டுகளாக மாறிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகிறது. அப்பகுதிகளில் ரோட்டோரங்களை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றால் சுற்றுச் சூழல் மாசு ஏற்பட்டு வருவதுடன் அப்பகுதிகளில் ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம்ஏற்பட்டுள்ளது.