தறிகெட்டு ஓடிய கார் மோதி எட்டு பேர் படுகாயம்
தறிகெட்டு ஓடிய கார் மோதி எட்டு பேர் படுகாயம்
தறிகெட்டு ஓடிய கார் மோதி எட்டு பேர் படுகாயம்
ADDED : ஜூன் 20, 2024 02:24 AM
கல்யாண்புரி: கிழக்கு டில்லியில் தறிகெட்டு ஓடிய கார் மோதியதில், எட்டு பேர் காயமடைந்தனர். கிழக்கு டில்லியின் கல்யாண்புரி பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஒருகார் தறிகெட்டு வேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள், சாலையோரம் நடந்து சென்ற பலர் மீது மோதிய கார், ஒரு ஆட்டோ உதிரிபாகங்கள் கடைக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் எட்டு பேர் காயமடைந்தனர். இவர்களில் இருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. சம்பவத்தைப் பார்த்து ஆத்திரமடைந்த பொதுமக்கள், கார் டிரைவரை மடக்கிப் பிடித்தனர். அப்போது தான் அவர் மதுபோதையில் கார் ஓட்டி வந்தது தெரிய வந்தது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார், கார் டிரைவரான தேவ் சிங், 37, என்பவரை கைது செய்தனர்.
அவர் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.