சத்தீஸ்கரில் என்கவுன்டர் எட்டு நக்சல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் என்கவுன்டர் எட்டு நக்சல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் என்கவுன்டர் எட்டு நக்சல்கள் சுட்டுக்கொலை
ADDED : ஜூன் 16, 2024 12:38 AM
நாராயண்பூர், சத்தீஸ்கர் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் எட்டு நக்சல்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் பகுதியில் உள்ள அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த 12ம் தேதி முதல் நக்சல்கள் தேடுதல் வேட்டையில் நாராயண்பூர், காங்கர், தன்டேவாடா, கோன்டகன் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.
மாவட்ட ரிசர்வ் போலீசார், சிறப்பு அதிரடிப்படையினர், இந்தோ - - திபெத்தியன் எல்லை போலீசை சேர்ந்த 53வது பட்டாலியன் போலீசார் இணைந்து நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையின்போது, நேற்று காலை வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் சரமாரியாகச் சுட்டனர். இதில் எட்டு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார். மேலும் இரு வீரர்கள் காயம் அடைந்தனர்.