துாங்கிய காவலாளி கார் ஏறி உயிரிழப்பு
துாங்கிய காவலாளி கார் ஏறி உயிரிழப்பு
துாங்கிய காவலாளி கார் ஏறி உயிரிழப்பு
ADDED : ஜூன் 02, 2024 02:04 AM
குருகிராம்:புதுடில்லி அருகே, காவலாளி மீது கார் ஏற்றி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
ஹரியானா மாநிலம் தரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்தர் குமார் என்ற சூடான், 48. குருகிராம் 108வது செக்டாரில் புதிய கட்டடம் கட்டும் இடத்தில் காவலாளியாக வேலை செய்தார்.
அவர் வேலை செய்யும் இடத்தில் கடந்த 30ம் தேதி காலை இறந்து கிடந்தார். அவரது குடும்பத்தினர் கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
கடந்த 29ம் தேதி நள்ளிரவு ஸ்விப்ட் டிசையர் கார் ஒன்று அந்தக் கட்டுமானத் தளம் வழியாக சென்றது. அந்தக் கார் துாங்கிக் கொண்டிருந்த ராஜேந்தர் குமார் மீது ஏறி இறங்கியது தெரிந்தது.
போலீசார் விசாரணை நடத்தில் டில்லி துவாராகாவைச் சேர்ந்த கார் உரிமையாளர் மணிந்தர் சிங், 26, என்பவரை நேற்று கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.