ரூ.51 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
ரூ.51 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
ரூ.51 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
ADDED : ஜூலை 18, 2024 11:47 PM
ஆமதாபாத்: குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு இடத்தில் ரகசியமாக போதை பொருள் தயாரிக்கப்படுவதாக, மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சூரத்தின் புறநகர் பகுதியில் உள்ள கிராமத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இதில், ஒரு கிடங்கை வாடகைக்கு எடுத்து சிலர், போதை பொருள் தயாரிப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு போதை பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த சுனில் யாதவ், விஜய் கஜேரா மற்றும் ஹரேஷ் கோரட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், தடை செய்யப்பட்ட மெபெட்ரோன் எனும் போதை பொருட்களை அவர்கள் தயாரித்து, மும்பையைச் சேர்ந்த சலீம் சயாத் என்பவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து, 51.4 கோடி ரூபாய் மதிப்புள்ள, 4 கிலோ மெபெட்ரோன் மற்றும் 31.4 கிலோ மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள சலீமை போலீசார் தேடி வருகின்றனர்.