இரு சக்கர வாகனம் மோதி துணை சபாநாயகர் படுகாயம்
இரு சக்கர வாகனம் மோதி துணை சபாநாயகர் படுகாயம்
இரு சக்கர வாகனம் மோதி துணை சபாநாயகர் படுகாயம்
ADDED : மார் 15, 2025 12:05 AM

சித்ரதுர்கா: கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ஹாவேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், துணை சபாநாயகருமான ருத்ரப்பா லமானி, நேற்று மாலை கூட்டத்தொடர் முடிந்து, தன் சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தாலுகாவின் ஜவனகொண்டனஹள்ளி அருகில், இயற்கை உபாதை கழிக்க காரில் இருந்து இறங்கினார். பின், மீண்டும் கார் அருகே வந்தபோது, வேகமாக வந்த இரு சக்கர வாகனம், இவர் மீது மோதியது.
கீழே விழுந்ததில் அவரது நெற்றி, பல், வலது முழங்காலில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக ஹிரியூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்காக தாவணகெரேயில் உள்ள ஷாமனுார் சிவசங்கரப்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
படுகாயம் அடைந்த பைக் பயணியும், ஹிரியூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.