டில்லி உஷ்ஷ்ஷ்: அதானி என்ன பேசினார்?
டில்லி உஷ்ஷ்ஷ்: அதானி என்ன பேசினார்?
டில்லி உஷ்ஷ்ஷ்: அதானி என்ன பேசினார்?
ADDED : ஜூலை 13, 2024 11:47 PM

புதுடில்லி: சமீபத்தில் சென்னை வந்திருந்தார், பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி. 'இவர், சென்னையில் யார் யாரைச் சந்தித்தார்; முதல்வருடன் என்ன பேசினார்; முதல்வரின் குடும்ப உறுப்பினரிடம் என்ன பேசினார்?' என, காங்கிரஸ் தலைவர்கள் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த விபரங்களை ராகுலிடம் சொல்லவே, இப்படி விசாரிப்பாம்.
இன்னொரு பக்கம், ராகுல் அலுவலகத்தில் உள்ள சிலரும், அதானியின் சென்னை 'விசிட்' குறித்து விசாரித்து வருகின்றனராம். டில்லியில் உள்ள சில சீனியர் அதிகாரிகளும், தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இது தொடர்பான விபரங்களை கேட்டு வருகின்றனர்; ஆனால், அந்த தமிழக அதிகாரிகளோ, விபரங்களை பகிர்ந்து கொள்ள பயப்படுகின்றனர்.
'சென்னைக்கு 14 பேருடன் வந்த அதானி, நான்கு மணி நேரம் தங்கி உள்ளார். முதல்வருடனும் அவர் ஆலோசனை நடத்தினார்; அத்துடன், முதல்வரின் குடும்பத்தில், 'பவர்புல்' ஆக இருக்கும் நபர் ஒருவருடனும் அதானி பேசினார்' என்கின்றனர்.
இ.சி.ஆர்., சாலையில் உள்ள ஒரு பங்களாவில் தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாம்; அங்கு அதானிக்கு விருந்தும் அளிக்கப்பட்டது. 'முதல்வரின் அமெரிக்க பயணத்திற்கு முன் இந்த சந்திப்பு நடைபெற வேண்டும்' என, தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர் இந்த ஏற்பாட்டை செய்தாராம். 'தி.மு.க., சீனியர் எம்.பி.,யின் மகனும், தமிழக அமைச்சருமான அந்த நபர் தான் இந்த சந்திப்பிற்கு காரணம்' என்கின்றனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக, பல விஷயங்கள் பேசப்பட்டாலும், 'தமிழகத்தில் அதானி அதிக அளவில் முதலீடு செய்வார்' என, பேசப்படுகிறது.