1 லட்சம் ஆட்டோக்களுக்கு 'லைசென்ஸ்' வழங்க முடிவு
1 லட்சம் ஆட்டோக்களுக்கு 'லைசென்ஸ்' வழங்க முடிவு
1 லட்சம் ஆட்டோக்களுக்கு 'லைசென்ஸ்' வழங்க முடிவு
ADDED : ஜூலை 08, 2024 06:38 AM

பெங்களூரு: பெங்களூரில் மக்கள் தொகை அதிகரிக்கிறது. இவர்களின் வசதிக்கு தகுந்தபடி புதிதாக ஒரு லட்சம் ஆட்aடோக்களுக்கு, லைசென்ஸ் வழங்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 2018ல், கர்நாடக போக்குவரத்து துறை, பெங்களூரில் 30,000 ஆட்டோக்களுக்கு லைசென்ஸ் அளித்தது. ஆறு ஆண்டுகளுக்கு பின், தற்போது ஒரு லட்சம் புதிய ஆட்டோக்களுக்கு, லைசென்ஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்கிறது. இவர்களின் தேவைக்கு தகுந்த அளவில், ஆட்டோக்களுக்கு லைசென்ஸ் அளிக்கப்படும். காற்று மாசு, ஒலி மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில், எல்.பி.ஜ., - சி.என்.ஜி., எலக்ட்ரிக் ஆட்டோக்களுக்கு லைசென்ஸ் அளிக்கப்படும். இந்த ஆட்டோக்கள் டிஜிட்டல் கட்டண மீட்டர் வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே ஆட்டோ லைசென்ஸ் வைத்துள்ளோருக்கு, மீண்டும் லைசென்ஸ் கிடைக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரூ. 3 லட்சம் அபராதம்
பெங்களூரில் சில ஆட்டோ ஓட்டுனர்கள், நடைபாதைகள், கடைகளின் முன் வாகனங்களை நிறுத்துவதாக, போக்குவரத்து போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, பெங்களூரு கிழக்கு, பெங்களூரு வடக்கு பிரிவுகளில், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில், பெங்களூரு கிழக்கு பிரிவு போலீசார் 300க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து, 1.52 லட்சம் ரூபாயும்; பெங்களூரு மேற்கு பிரிவு போலீசார், 525 வழக்குகள் பதிவு செய்து, 1.96 லட்சம் ரூபாயும் அபராதம் விதித்தனர்.
பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள், சீருடை அணியாமல் ஓட்டியது மற்றும், 'ஒன்வே'யில் ஓட்டியது, வாகன நிறுத்த அனுமதி இல்லாத இடத்தில் ஆட்டோவை நிறுத்தியது, அதிக கட்டணம் வசூலித்தது உட்பட பல்வேறு வழக்குகளில், 825க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்களிடம் இருந்து 3.48 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.