விவசாயி தற்கொலை
தார்வாட், நவல்குந்தின் ஆளகவாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சோம்பபா ஜோகநாயக்கர், 43. இவர் பயிரிடும் பணிக்காக பல இடங்களில் 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இதை அடைக்க முடியாமல் அவதிப்பட்ட அவர், நேற்று காலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரூ.37 லட்சம் பறிமுதல்
சாம்ராஜ்நகர், குண்டுலுபேட்டின், எல்லைப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை, சோதனை நடத்திய போது 37 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ஆவணங்கள் இல்லாததால், பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நான்கு சிறுவர்கள் பலி
தார்வாடின், மனசூர் கிராமத்தின் புறநகரில் வசித்தவர்கள் சதீஷ், 16, உமேஷ், 16. இவர்கள் நேற்று காலை, கிராமத்தின் கல்குவாரி நீரில் விளையாட சென்றனர். ஆழமான பகுதிக்கு சென்றதால், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கஞ்சா விற்றவர் கைது
கோலார் நகரில், பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்த, ஒடிசாவை சேர்ந்த பகிரதி பட்ரா, 40, என்பவரை போலீசார் கைது செய்தனர். 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.