முன்னாள் அமைச்சரிடம் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
முன்னாள் அமைச்சரிடம் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
முன்னாள் அமைச்சரிடம் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூலை 07, 2024 03:17 AM

பெங்களூரு: தொழில் துறையில் ஆள் சேர்ப்பில் நடந்த முறைகேடு குறித்து, பா.ஜ., முன்னாள் அமைச்சர் முருகேஷ் நிரானியிடம் விசாரணை நடத்த, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 2008 முதல் 2013 வரை பா.ஜ., அரசு, ஆட்சியில் இருந்தது. முருகேஷ் நிரானி தொழில்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது தொழில்துறையின் சந்தைப்படுத்துதல் பிரிவிற்கு, ஆள் சேர்ப்பில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சமூக அலுவலரான ஆபிரகாம் என்பவர், பெங்களூரு ஹைகிரவுண்ட் போலீசில் புகார் செய்தார். ஆனால் அந்த புகாரை போலீசார் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
முருகேஷ் நிரானியிடம் விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிடக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆபிரகாம் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித் விசாரித்தார். முருகேஷ் நிரானியிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
புகார் மனுவை வாங்காத, ஹைகிரவுண்ட் போலீசாருக்கும் நோட்டீஸ் அனுப்பும்படிகூறினார்.