சிக்கோடி அல்லது அதானி புது மாவட்டம் 'அரசுக்கு எண்ணமில்லை' என்கிறார் அமைச்சர்
சிக்கோடி அல்லது அதானி புது மாவட்டம் 'அரசுக்கு எண்ணமில்லை' என்கிறார் அமைச்சர்
சிக்கோடி அல்லது அதானி புது மாவட்டம் 'அரசுக்கு எண்ணமில்லை' என்கிறார் அமைச்சர்
ADDED : ஜூலை 07, 2024 03:17 AM

பெலகாவி: ''சிக்கோடி அல்லது அதானியை புதிய மாவட்டமாக அறிவிக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை,'' என, சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.
பெலகாவி மாவட்டம் சிக்கோடியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் மாற்றம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை, இவை எல்லாம் யூகங்கள். மகதாயி திட்டம் குறித்து, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் கரோஷியிடம் பேசி உள்ளேன்.
இதுகுறித்தும் விவாதம் நடந்தது. மகதாயி திட்டத்தில் கோவா அரசின் நிலைபாடு குறித்தும் விவாதிப்போம். வால்மீகி வளர்ச்சி வாரியம் முறைகேடு குறித்து, எஸ்.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். சில அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
ஏழைகளுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, அதானியில் புதிதாக கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்பட்டு உள்ளது. நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்கள் மதிக்கப்பட வேண்டும்.
வரும் நாட்களில், அனைத்து தாலுகா அளவிலும், வழக்கறிஞர்கள் அறை ஏற்படுத்த, அரசு ஆலோசித்து வருகிறது. புதிதாக வரும் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி தேவை என்பதால், அரசு சார்பில் 'வழக்கறிஞர் பயிற்சி அகாடமி' துவங்க முடிவு செய்துள்ளோம்.
சிக்கோடி அல்லது அதானியை புதிய மாவட்டமாக அறிவிக்க, அரசிடம் எந்த திட்டமும் இல்லை.
இவ்வாறு அவர்கூறினார்.