142 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் பின்னடைவு
142 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் பின்னடைவு
142 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் பின்னடைவு
ADDED : ஜூன் 09, 2024 03:38 AM
ஹூப்பள்ளி ; லோக்சபா தேர்தலில், 142 சட்டசபை தொகுதிகளில், ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ள தொகுதிகளில், பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு கிடைத்துள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
ஆளுங்கட்சியாக இருந்தும், 142 சட்டசபை தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளது. அதே போன்று பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ள, 18 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னணி இடத்தை பிடித்து உள்ளது.
கூடுதல் பொறுப்பு
லோக்சபா தேர்தலில், அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பை, கட்சி மேலிடம் அளித்திருந்தது. கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்காவிட்டால், அமைச்சர் பதவி பறிபோகும் என, எச்சரித்திருந்தது.
தகுதியான வேட்பாளர்கள் கிடைக்காததால், அமைச்சர்களின் குடும்பத்தினருக்கு சீட் கிடைத்தது.
ஆனால் 14 அமைச்சர்களால், தங்கள் தொகுதியிலேயே கட்சி வேட்பாளர்களுக்கு, வெற்றி பெற்றுத்தர முடியவில்லை.
இந்த பட்டியலில், சந்தோஷ்லாட், எம்.பி.பாட்டீல், தினேஷ்குண்டுராவ், ராமலிங்கரெட்டி, மல்லிகார்ஜுன், பரமேஸ்வர், சுதாகர், கிருஷ்ணபைரேகவுடா, ராஜண்ணா, முனியப்பா, ஹெச்.கே.பாட்டீல், லட்சுமி ஹெப்பால்கர், செலுவராயசாமி என, பலர் உள்ளனர்.
இம்முறை லோக்சபா தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி பெரும்பாலும் வெற்றி அடைந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் 'பென் டிரைவ்' வெளி வந்திருக்காவிட்டால், பா.ஜ.,வுக்கு மேலும் அதிகமான தொகுதிகள் கிடைத்திருக்கும். 142 சட்டசபை தொகுதிகளில், கூட்டணி வேட்பாளர்கள் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளனர்.
அதிக ஓட்டுகள்
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், 60 தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களுக்கு அதிக ஓட்டுகள் கிடைக்க உதவினர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ள, 11 தொகுதிகளில் ம.ஜ.த., முதலிடம் பெற்றுள்ளது. 42 தொகுதிகளில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு அதிக ஓட்டுகள் கிடைக்க உதவினர்.
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ள, 18 தொகுதிகளில் காங்கிரசுக்கு அதிக ஓட்டு கிடைத்துள்ளது. இரண்டு தொகுதிகளில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், ம.ஜ.த., வேட்பாளருக்கு அதிகமான ஓட்டுகள் கிடைக்க வைத்துஉள்ளனர்.