Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ காங்., ஓட்டு சதவீதம் உயர்வு பா.ஜ., - ம.ஜ.த.,வுக்கு குறைவு

காங்., ஓட்டு சதவீதம் உயர்வு பா.ஜ., - ம.ஜ.த.,வுக்கு குறைவு

காங்., ஓட்டு சதவீதம் உயர்வு பா.ஜ., - ம.ஜ.த.,வுக்கு குறைவு

காங்., ஓட்டு சதவீதம் உயர்வு பா.ஜ., - ம.ஜ.த.,வுக்கு குறைவு

ADDED : ஜூன் 06, 2024 06:00 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு, : முந்தைய லோக்சபா தேர்தலை ஒப்பிடுகையில், காங்கிரஸ் 13.32 சதவீதம் கூடுதல் ஓட்டுகள் பெற்றுள்ளது. பா.ஜ., - ம.ஜ.த., ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 5,47,25,675 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3,86,57,654 வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். இது, 70.63 சதவீதம் ஆகும்.

இம்முறை, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 25 தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., 17லும்; 3 தொகுதியில் போட்டியிட்ட ம.ஜ.த., 2லும்; 28 தொகுதியில் போட்டியிட்ட காங்., 9லும் வெற்றி பெற்றன.

இதன்படி, பா.ஜ.,வுக்கு, 17,797,699 ஓட்டுகளும்; காங்கிரசுக்கு, 17,554,381 ஓட்டுகளும்; ம.ஜ.த.,வுக்கு, 21,63,203 ஓட்டுகளும்; பகுஜன் சமாஜுக்கு, 1,27,443 ஓட்டுகளும்; மார்க்சிஸ்ட் கம்யூ.,க்கு 4,546 ஓட்டுகளும்; மற்ற வேட்பாளர்களுக்கு, 7,78,941 ஓட்டுகளும்; நோட்டாவுக்கு, 2,17,456 ஓட்டுகளும்; பதிவாகி உள்ளன.

இதே கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், காங்., - ம.ஜ.த., கூட்டணி அமைத்தும், பா.ஜ., தனித்தும் போட்டியிட்டன. காங்., - 21 தொகுகளில் போட்டியிட்டு 1லும்; ம.ஜ.த., 7 தொகுதியில் போட்டியிட்டு 1லும்; பா.ஜ., 27 தொகுதியில் போட்டியிட்டு 25லும், ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றார்.

அப்போது, பா.ஜ.,வுக்கு, 1,80,53,454 ஓட்டுகளும்; காங்கிரசுக்கு, 1,12,03,016 ஓட்டுகளும்; ம.ஜ.த.,வுக்கு 33,97,229 ஓட்டுகளும்; பகுஜன் சமாஜுக்கு, 4,12,382 ஓட்டுகளும்; மற்ற வேட்பாளர்களுக்கு, 13,69,087 ஓட்டுகளும்; நோட்டாவுக்கு, 2,50,810 ஓட்டுகளும் பதிவாகின.

அதாவது, 2019 தேர்தலை ஒப்பிடுகையில், 2024ல் பெரிய அளவில் ஓட்டுகள் சிதறி உள்ளன. அப்போது, 51.75 சதவீதம் ஓட்டுகள் பெற்றிருந்த பா.ஜ., 5.69 சதவீதம் குறைந்து, 46.06 ஓட்டுகளும்; 32.11 சதவீதம் ஓட்டுகள் பெற்றிருந்த காங்கிரஸ், 13.32 சதவீதம் கூடுதலாகி, 45.43 சதவீதம் ஓட்டுகளும்; 9.74 சதவீதம் ஓட்டுகள் பெற்றிருந்த ம.ஜ.த., 4.14 சதவீதம் குறைந்து, 5.60 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளன.

வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையில், காங்கிரஸ் குறைந்தாலும், ஓட்டுகள் எண்ணிக்கையில் பெரிய அளவில் லாபத்தை கண்டுள்ளது என்றே சொல்லலாம்.

...பாக்ஸ்...

வரைபடம் உண்டு

கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்

பா.ஜ., 46.06%

காங்., 45.43%

ம.ஜ.த., 5.60%

பி.எஸ்.பி., 0.33%

சி.பி.எம்., 0.01%

மற்றவை 2.02%

நோட்டா 0.56%





      Our Apps Available On




      Dinamalar

      Follow us