ADDED : ஜூன் 03, 2024 04:55 AM

பெங்களூரு: பெங்களூரின் ஹெசரகட்டாவில் மின் துறை அமைச்சர் ஜார்ஜுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. முதல்வர் சித்தராமையா, நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், இந்த பண்ணை வீட்டுக்கு ஓய்வு எடுக்க சென்றிருந்தார்.
அரசியல் பரபரப்பின்றி, சிறிது நேரம் அமைதியாக பொழுதை கழிக்கும் நோக்கில் முதல்வர் சென்றிருந்தார். நேற்று முன்தினம் கனமழை பெய்ததால், அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. மின்சாரம் இல்லாமல் முதல்வர் அவதிப்பட்டார். இவருடன் சில அமைச்சர்களும் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
பண்ணை வீட்டில் வைத்து, லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என, வெளியான பல்வேறு அமைப்புகளின் கருத்து கணிப்புகள், மேலவை தேர்தல், நாளை நடக்கவுள்ள ஓட்டு எண்ணிக்கை உட்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.