Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பஸ் நிலையங்களில் தரமற்ற உணவு முதல்வர் அலுவலகம் எச்சரிக்கை

பஸ் நிலையங்களில் தரமற்ற உணவு முதல்வர் அலுவலகம் எச்சரிக்கை

பஸ் நிலையங்களில் தரமற்ற உணவு முதல்வர் அலுவலகம் எச்சரிக்கை

பஸ் நிலையங்களில் தரமற்ற உணவு முதல்வர் அலுவலகம் எச்சரிக்கை

ADDED : ஜூன் 20, 2024 05:51 AM


Google News
பெங்களூரு: 'அரசு பஸ் நிலையங்களில் உள்ள கடைகளில், காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என முதல்வர் அலுவலகம் எச்சரித்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள உணவகங்களின் தரம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதையடுத்து, முதல்வரின் உத்தரவின்படி, உணவு தரம் மற்றும் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள், கடந்த சில நாட்களுக்கு முன் மாநிலம் முழுதும் பல ஹோட்டல்களில் சோதனை நடத்தினர். அங்கிருந்த பொருட்களை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோன்று, கர்நாடகா பஸ் நிலையங்களில் உள்ள உணவு பொருட்களின் தரம் குறைவாக இருப்பதாக, ஊடகங்கள், சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

இதன் அடிப்படையில், முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கர்நாடகாவில், பஸ் நிலையங்களில் உணவு பொருட்கள் உட்பட பல கடைகள் உள்ளன. இங்கு விற்பனையாகும் உணவு பொருட்கள், காலாவதி ஆனவையாகவும்; சுகாதாரம் இல்லை என்பது உட்பட பல பிரச்னைகள் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவயது.

இதன் அடிப்படையில் முதல்வர் அலுவலக பொது குறை தீர்ப்பு துறையின் சிறப்பு பணி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, மாநிலம் முழுதும் உள்ள 201 மாவட்ட மற்றும் தாலுகா அலுவலகங்கள், தனியார் பஸ் நிலையங்களில் உள்ள 748 வணிக கடைகள், உணவு நிறுவனங்கள் ஆய்வு செய்யப்படும்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011ன்படி, வணிக கடைகள், உணவு தொழில்களை சரிபார்க்க, இம்மாதம் சிறப்பு பிரசாரம் மேற்கொள்ளப்படும். வரும் நாட்களில் மறு ஆய்வின் போது குறைபாடுகள் சரி செய்யாவிட்டால், விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us