முதல்வர் பெயர், படம் ஆதரவாளர்கள் 'டாட்டூ'
முதல்வர் பெயர், படம் ஆதரவாளர்கள் 'டாட்டூ'
முதல்வர் பெயர், படம் ஆதரவாளர்கள் 'டாட்டூ'
ADDED : ஜூலை 05, 2024 06:14 AM
பெங்களூரு: மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் நடந்த முறைகேட்டால், முதல்வர் சித்தராமையா நெருக்கடியில் சிக்கியுள்ளார். முதல்வரை ராஜினாமா செய்ய சொல்லி, எதிர்க்கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். முதல்வருக்கு ஆதரவாக, அவரது விசுவாசிகள் நுாதன போராட்டம் நடத்தினர்.
மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், வீட்டுமனைகள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வர் சித்தராமையாவின் மனைவி பெயருக்கு, வீட்டுமனை பெறப்பட்டுள்ளது. இந்த வீட்டுமனை, மனைவிக்கு வந்த தாய் வீட்டு சீதனம் என, முதல்வர் கூறி வருகிறார்.
தன் சொந்த மாவட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதால், முதல்வர் தர்ம சங்கடத்தில் சிக்கி தவிக்கிறார். இன்னும் சில நாட்களில், சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் துவங்குகிறது. இதில் ஆளுங்கட்சியை திணறடிக்க, எதிர்க்கட்சியினருக்கு வலுவான அஸ்திரம் கிடைத்துள்ளது.
முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததில் இருந்தே, முதல்வரை ராஜினாமா செய்ய சொல்லி பா.ஜ., வலியுறுத்துகிறது. இந்நிலையில் சித்தராமையாவின் விசுவாசிகள், அவருக்கு நுாதன முறையில், தங்கள் ஆதரவை தெரிவிக்கின்றனர். இவரது பெயர், படத்தை தங்கள் உடலில் பச்சை குத்தி கொண்டு, ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோக்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.