Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ காவல்துறை உயரதிகாரிகளுக்கு முதல்வர் சித்து உத்தரவு!: ஒவ்வொரு ஸ்டேஷனாக சென்று ஆய்வு செய்யுமாறு ஆணை

காவல்துறை உயரதிகாரிகளுக்கு முதல்வர் சித்து உத்தரவு!: ஒவ்வொரு ஸ்டேஷனாக சென்று ஆய்வு செய்யுமாறு ஆணை

காவல்துறை உயரதிகாரிகளுக்கு முதல்வர் சித்து உத்தரவு!: ஒவ்வொரு ஸ்டேஷனாக சென்று ஆய்வு செய்யுமாறு ஆணை

காவல்துறை உயரதிகாரிகளுக்கு முதல்வர் சித்து உத்தரவு!: ஒவ்வொரு ஸ்டேஷனாக சென்று ஆய்வு செய்யுமாறு ஆணை

ADDED : ஜூலை 07, 2024 03:22 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: ஒவ்வொரு ஸ்டேஷனாக சென்று ஆய்வு செய்யும்படி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.பெங்களூரு ரெகுலர் பேனர் செய்தி

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், மாநிலம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்தன.

ஹூப்பள்ளியில் நடந்த கல்லுாரி மாணவி நேஹா, அஞ்சலி கொலைகள் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

கூட்டு பலாத்காரம்


'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள், பெலகாவியில் பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கியது, ஹாவேரி ஹனகல்லில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தது, பெங்களூரு விதான் சவுதாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களால், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என அரசை, எதிர்க்கட்சிகள் கடுமையாக தாக்கின. இதனால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில், பெங்களூரில் உள்ள கர்நாடக மாநில போலீஸ் தலைமையகத்தில், மாநில உயர் போலீஸ் அதிகாரிகளின் மாநாடு நேற்று நடந்தது.

முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், அரசின் தலைமை செயலர் ரஜ்னீஷ் கோயல், உள்துறை கூடுதல் தலைமை செயலர் உமா சங்கர், டி.ஜி.பி., அலோக் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சருக்கு வாழ்த்து


மாநாட்டில் போலீஸ் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட சில புதிய மென்பொருட்களை முதல்வர் சித்தராமையா வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:

எங்கள் அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த ஓராண்டில் எந்தவித மதக் கலவரமும் இல்லாமல், சட்டம் - ஒழுங்கை சிறப்பாக நிலை நாட்டியதற்காக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், கர்நாடக போலீஸ் துறைக்கு எனது வாழ்த்துகள்.

உங்கள் அதிகார வரம்பில் வரும் கிளப்புகளில் சூதாட்டம், போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஐ.ஜி., -- எஸ்.பி.,க்கள் நேரடி பொறுப்பு ஆவர்.

ஐ.ஜி., -- எஸ்.பி.,க்கள் தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தவறாமல் சென்று, அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

போலி செய்திகள்


போலீஸ் நிலையங்களுக்குச் சென்று அரைமணி நேரம், ஏதோ சம்பிரதாயத்திற்காக ஆய்வு செய்ய கூடாது. தீவிரமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

போலி செய்திகள் பரப்பப்படுவது சமூகத்தில் முள்ளாக இருக்கிறது. போலி செய்திகள் பரப்புதல் வேகமாக அதிகரித்து வருகின்றன.

இவற்றைத் தடுக்க உண்மை கண்டறியும் பிரிவுகளை உருவாக்கியுள்ளோம். இருப்பினும் போலி செய்திகள் அதிகரித்து வருகின்றன. இதை பொறுத்துக் கொள்ள முடியாது.

போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவுகளை பயன்படுத்துங்கள். தன்னெழுச்சியாக வரும் புகார்களை பதிவு செய்து, எந்தவித தயக்கமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுங்கள்.

ரவுடிகள்


போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் யார், ரவுடிகள் யார் என்பது, அந்தந்த போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு நன்கு தெரியும்.

போதைப்பொருள் விற்பனையை தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உங்களுக்கு ஏன் துப்பாக்கிகள் கொடுக்கப்படுகின்றன; உங்கள் துப்பாக்கிகளுக்கு ரவுடிகள் ஏன் பயப்படுவதில்லை? காவல்துறையை பார்த்து ரவுடிகள் நடுங்க வேண்டும்.

காவல்துறையில் உள்ள தவறுகளை சரி செய்து, பலப்படுத்தி, நாட்டின் மிகச்சிறந்த காவல்துறை என்ற பெயரை நிலை நாட்ட வேண்டும்.

அனைவரும் சமூகத்தில் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

சட்டம் -- ஒழுங்கு நிலையாக இருந்தால், முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகள் சாத்தியமாகும். இதனால் தனிநபர் வருமானம் மற்றும் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.

உளவு பிரிவு


மூத்த போலீஸ் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாக செய்தால், அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகள், போலீசார் தங்கள் பணிகளை திறம்பட செய்வர்.

இரவு ரோந்து பணி செல்வது, நெடுஞ்சாலை ரோந்து ஆகியவற்றை திறம்பட கையாள வேண்டும். ஹூப்பள்ளியில் ஒன்றன்பின் ஒன்றாக கொலைகள் நடந்தன.

உளவுப் பிரிவு எச்சரிக்கையாக இருந்திருந்தால், கொலைகளை தவிர்த்து இருக்கலாம். இந்த கொலைகளால் உயர் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாடு முடிந்த பின்னர் போலீஸ் அதிகாரிகளுடன், முதல்வர் சித்தராமையா குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us