சத்தீஸ்கர் வன்முறை கலெக்டர், எஸ்.பி., இடமாற்றம்
சத்தீஸ்கர் வன்முறை கலெக்டர், எஸ்.பி., இடமாற்றம்
சத்தீஸ்கர் வன்முறை கலெக்டர், எஸ்.பி., இடமாற்றம்
ADDED : ஜூன் 13, 2024 12:48 AM
ராய்ப்பூர், சத்தீஸ்கரின் பாலோட்பஜார் - பட்பாரா மாவட்டத்தில் கிரோதுபுரி தம் பகுதியில் சாத்னாமி சமூகத்தினர் நிறுவிய துாணை, மர்ம நபர்கள் கடந்த மாதம் உடைத்தனர். இச்சம்பவத்தை கண்டித்து சாத்னாமி சமூகத்தினர், 10ம் தேதி பேரணி சென்றனர்.
அப்போது கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்; அரசு அலுவலகங்கள் மீது கற்களை வீசி தாக்கினர். 150க்கும் மேற்பட்ட வாகனங்களை கொளுத்தினர். அங்குள்ள பதிவாளர் அலுவலகத்தில் இருந்த லட்சக்கணக்கான ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம், வரும் 16ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தது. வன்முறையில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாலோட்பஜார் - பட்பாரா கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.