மிராஜ் போர் விமானங்கள் பெற கத்தாருடன் மத்திய அரசு பேச்சு
மிராஜ் போர் விமானங்கள் பெற கத்தாருடன் மத்திய அரசு பேச்சு
மிராஜ் போர் விமானங்கள் பெற கத்தாருடன் மத்திய அரசு பேச்சு
ADDED : ஜூன் 23, 2024 01:58 AM

புதுடில்லி : கார்கில் போர், பாலகோட் தாக்குதல்கள் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றியவை மிராஜ் ரக போர் விமானங்கள்.
தற்போது நம் விமானப்படையில், 48 மிராஜ் போர் விமானங்கள் உள்ளன. வடகிழக்கு பகுதிகளில் இதன் தேவை அதிகரித்துள்ளதால், மேற்காசிய நாடான கத்தாரிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட மிராஜ் விமானங்களை வாங்குவது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதன்படி, 12 விமானங்கள் நல்ல பயன்பாட்டு நிலையில் இருப்பதாகவும், இதை 5,000 கோடி ரூபாய்க்கு கத்தார் அரசு, நமக்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பராமரிப்பு எளிதாக இருக்கும் என்பதாலும், இதை வாங்குவதற்கு மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த விமானங்கள் அனைத்தும், அவற்றில் பொருத்துவதற்கான ஆயுதங்கள் மற்றும் கூடுதல் இன்ஜினோடும் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.