போலீசை அவமதித்து 'டாட்டூ' கடை ஊழியர் மீது வழக்கு
போலீசை அவமதித்து 'டாட்டூ' கடை ஊழியர் மீது வழக்கு
போலீசை அவமதித்து 'டாட்டூ' கடை ஊழியர் மீது வழக்கு
ADDED : ஜூலை 21, 2024 07:24 AM
பெங்களூரு: போலீசாரை அவமதிக்கும் வகையில் ஒரு வாலிபருக்கு 'டாட்டூ' போட்டுவிட்ட கடை ஊழியர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
பெங்களூரு, பிரிகேட் சாலையில் 'டாட்டூ சூத்ரா' என்ற பெயரில், டாட்டூ குத்தும் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையின் பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளது. அந்த பக்கத்தில், கடைக்கு வந்து டாட்டூ போட்டுக் கொள்வோரின் வீடியோக்கள் பதிவிடப்படும்.
அந்த வகையில், அந்த வகையில், தன் நெஞ்சில் போலீசாரை அவமதிக்கும் வகையில், ஒரு வாலிபர் டாட்டூ போட்டிருந்த படமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. இதுபற்றி கப்பன் பார்க் போலீசாருக்கு தெரிந்தது.
நேற்று முன்தினம் இரவு டாட்டூ கடைக்கு சென்று விசாரித்தனர். வாலிபர் ஒருவருக்கு, டாட்டூ கலைஞர் ரித்தேஷ் என்பவர், டாட்டூ போட்டுவிட்டது தெரிய வந்தது.
இதையடுத்து ரித்தேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை நடக்கிறது. டாட்டூ போட்டுக் கொண்ட வாலிபரிடம் விசாரிக்கவும் போலீசார் தயாராகின்றனர்.