ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளராக அழைப்பு
ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளராக அழைப்பு
ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளராக அழைப்பு
ADDED : ஜூலை 08, 2024 06:39 AM

தார்வாட்: ''ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளராக மாற வேண்டுமானால் விடாமுயற்சியும், திறமையும் தேவை. தையல் கற்றுக் கொண்ட பெண்களுக்கு வருங்காலத்தில் பெரிய வாய்ப்பு கிடைக்கும்,'' என, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
ஹூப்பள்ளியில் நேற்று சி.எஸ்.ஆர்., மானியத்தின் கீழ், கிராம விகாசா அறக்கட்டளை மற்றும் இதர நிறுவனங்கள் சார்பில் 'பெண்களுக்கான இலவச தையல் இயந்திரம், சான்றிதழ் வழங்கும் விழாவில், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேசியதாவது:
உலகளவில் ஜவுளி உற்பத்தியில், நமது நாடு நான்காவது இடத்தில் உள்ளது. வரும் நாட்களில் இரண்டாவது இடத்தை அடைய போகிறோம்.
மத்திய அரசின் திட்டத்தால் ஆடை துறையில் பெரிய வாய்ப்புகள் திறக்கப்பட்டு உள்ளன. அடிப்படை தையல் பயிற்சி அளிக்கிறோம்.
அதிகளவில் துணிகளை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். வருங்காலத்தில் தையல் கற்றுக் கொண்ட பெண்களுக்கு பெரிய வாய்ப்பு கிடைக்கும்.
இரண்டு, மூன்று ஆயத்த ஆடை நிறுவனங்கள் தார்வாடில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி உள்ளன. நீங்களும் ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளராக மாற வேண்டும்.
அதற்கு விடாமுயற்சியும், திறமையும் தேவை. வங்கியில் கடன் வாங்கி, நீங்களே முதலாளியாக மாறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.