ADDED : ஜூன் 02, 2024 09:34 PM

சாம்ராஜ் நகர்::கள்ளக்காதலுக்கு மறுத்த அண்ணியால், அண்ணனை கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார்.
சாம்ராஜ் நகரின் குண்டுலுபேட் சவுடஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத், 45. இவரது தம்பி குமார், 39. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரசாத் மனைவி மீது, குமார் கண் வைத்தார்.
தன்னுடன் கள்ளக்காதல் வைத்து கொள்ளும்படி, அண்ணியை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.
இதுபற்றி சில நாட்களுக்கு முன்பு, பிரசாத்திடம் மனைவி கூறினார்.
நேற்று முன்தினம் இரவு குமாரை அழைத்து, பிரசாத் கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பிரசாத்தை குத்திவிட்டு குமார் தப்பி ஓடினார். பலத்த காயம் அடைந்த பிரசாத் இறந்தார். குண்டுலுபேட் போலீசார், குமாரை கைது செய்தனர்.