Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ குடும்ப கவுரவத்தை பாழாக்கியதாக தங்கையை கொன்ற அண்ணன் கைது

குடும்ப கவுரவத்தை பாழாக்கியதாக தங்கையை கொன்ற அண்ணன் கைது

குடும்ப கவுரவத்தை பாழாக்கியதாக தங்கையை கொன்ற அண்ணன் கைது

குடும்ப கவுரவத்தை பாழாக்கியதாக தங்கையை கொன்ற அண்ணன் கைது

ADDED : ஜூன் 24, 2024 04:39 AM


Google News
பாகல்கோட் : தலை வேறு, உடல் வேறாக கண்டுபிடிக்கப்பட்ட பெண் வழக்கில், கொலையானவரின் அண்ணன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பாகல்கோட் பீளகியின் ஹளே டக்கலகி தோட்டத்தின், குடியிருப்பு பகுதியில் மே 27ல், அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவர் தலை வேறு, உடல் வேறாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து அங்கு வந்த பீளகி போலீசார், உடலை மீட்டு விசாரணையை துவக்கினர்.

பெண் அணிந்திருந்த கறுப்பு நிற ஜீன்ஸ், ஸ்மைல் என எழுதப்பட்ட பிங்க் நிற டி ஷர்ட், கால்களில் கொலுசு, கறுப்பு நிற கயிறு இருந்தது. இவற்றை போட்டோ எடுத்து, சுற்றுப்புற மாவட்டங்களின் போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பினர்.

இவர் பீளகியின், பானகன்டி கிராமத்தை சேர்ந்த ப்ரீத்தி, 19, என்பது தெரிந்தது. அதன்பின் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கொலையாளியை கண்டுபிடித்து, கைது செய்தனர்.

விஜயபுராவின், கோல்ஹாரா கிராமத்தை சேர்ந்த ப்ரீத்தி, சிறு வயதில் இருந்து பீளகியின், பாடகன்டி கிராமத்தில் தன பெரியம்மா ருக்மவ்வா வீட்டில் வளர்ந்தார்.

ப்ரீத்திக்கு 16 வயதில் திருமணம் நடந்தது. இது தொடர்பாக, வழக்கு பதிவானதால், அவர் கணவர் வீட்டுக்கு செல்லவில்லை. மூன்று ஆண்டுகளாக கோல்ஹாரா கிராமத்தில் தன் அண்ணன் சந்தோஷ், 22, உடன் வசித்து வந்தார்.

ப்ரீத்தி குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். சிலருடன் கள்ளத்தொடர்பும் வைத்திருந்தார்.

அண்ணன் பலமுறை புத்திமதி கூறியும் திருந்தவில்லை. ப்ரீத்தியின் செயலால் கிராமத்தில், பலரும் பலவிதமாக பேசினர். குடும்ப மரியாதை பாழானதாக கருதி தங்கையை கொலை செய்ய, சந்தோஷ் திட்டம் தீட்டினார்.

தங்கையிடம் 'வா, உன் கணவர் வீட்டுக்கு செல்லலாம். பெரியவர்கள் முன்னிலையில் பேசி, திருமண உறவை முறித்து கொண்டு வரலாம். அதன்பின் உனக்கு வேறு திருமணம் செய்கிறோம்' என கூறி பீளகிக்கு அழைத்து சென்றார்.

வழியில் ஹளே டக்களகி அருகில், தங்கையை கழுத்தை நெரித்து, தலையில் கல்லை போட்டு செய்தார்.

தலை, உடல் என தனியாக வெட்டி அங்கேயே வீசியது, விசாரணையில் தெரிந்தது.

சந்தோஷை போலீசார், நேற்று கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us