மாநிலம் முழுதும் பா.ஜ.,வினர் போராட்டம்
மாநிலம் முழுதும் பா.ஜ.,வினர் போராட்டம்
மாநிலம் முழுதும் பா.ஜ.,வினர் போராட்டம்
ADDED : ஜூன் 20, 2024 02:30 AM

ஆண்ட்ரூஸ் கஞ்ச்:மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்காக ஆளும் ஆம் ஆத்மி அரசை கண்டித்து, பா.ஜ., தலைவர்கள் நேற்றும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டமும் பேரணிகளையும் நடத்தினர்.
டில்லியில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. பல இடங்களில், அசுத்தமான கழிவுநீர் கலந்த தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
முறையாக மக்களுக்கு வினியோகிக்கப்பட வேண்டிய தண்ணீரை டேங்கர் மாபியா மூலம் தண்ணீரை கள்ளச்சந்தையில் ஆளும் ஆம் ஆத்மி அரசை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் விற்பனை செய்வதாக பா.ஜ., குற்றஞ்சாட்டி வருகிறது.
இத்தனை பிரச்னைக்கும் காரணமான ஆம் ஆத்மி அரசை கண்டித்து மக்களுடன் இணைந்து நேற்று பா.ஜ., தேசிய தலைநகர் முழுவதும் பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது.
ஆண்ட்ரூஸ் கஞ்சில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், “ஆம் ஆத்மி அரசின் இலவச குடிநீர் திட்டம், ஒரு ஏமாற்று வேலை என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் மக்கள் ஏங்குகின்றனர். தண்ணீர் தட்டுப்பாட்டால் பல பகுதிகளில் குழந்தைகள் பல நாட்களாக குளிக்க முடியாமல் உள்ளனர்.
“தண்ணீர் டேங்கர்களுக்காக பெண்கள் இரவு, பகலாக காத்திருக்கின்றனர்,” என்றார்.
இந்த போராட்டத்தில் புதுடில்லி எம்.பி., பன்சூரி ஸ்வராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் பங்ேற்றனர்.
தேசிய தலைநகரின் பல்வேறு நகராட்சி வார்டுகளில் டில்லியை சேர்ந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் பேரணிகளை நடத்தி, ஆம் ஆத்மி அரசின் தோல்வியை கண்டித்தனர்.