நீட் தேர்வை கண்டித்து ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை கண்டித்து ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை கண்டித்து ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 20, 2024 02:27 AM

புதுடில்லி:முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, ஆம் ஆத்மியின் இளைஞர் அணியினர், நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இல்லத்திற்கு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., சஞ்சீவ் ஜா தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், “தேர்வு நடத்துவதில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவதால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“நீட் தேர்வு விவகாரத்தில் உரிய காலக்கெடுவிலும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்,” என வலியுறுத்தினார்.