Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ராகுல் மன்னிப்பு கேட்க பா.ஜ., தலைவர் வலியுறுத்தல்

ராகுல் மன்னிப்பு கேட்க பா.ஜ., தலைவர் வலியுறுத்தல்

ராகுல் மன்னிப்பு கேட்க பா.ஜ., தலைவர் வலியுறுத்தல்

ராகுல் மன்னிப்பு கேட்க பா.ஜ., தலைவர் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 02, 2024 10:43 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு : ''ஹிந்துக்கள் குறித்த பேச்சுக்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, பா.ஜ., மாநிலத் தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தினார்.

லோக்சபாவில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசும்போது, 'தங்களை ஹிந்து என கூறிக்கொள்பவர்கள், 24 மணி நேரமும் வன்முறையை, வெறுப்பை துாண்டி விடுகின்றனர்' என குற்றஞ்சாட்டினார்.

இதற்கு ஆளும் கட்சியினர் உட்பட நாடு முழுதும் ஹிந்து அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பெங்களூரில் நேற்று மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அளித்த பேட்டி:

லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் முதன் முறையாக பேசியதில், பொய், ஏமாற்றம், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் நிறைந்திருந்தது.

அவர், தன் உரையின் மூலம், லோக்சபாவின் கண்ணியத்தை அச்சுறுத்தி உள்ளார். லோக்சபா தேர்தலின்போதும், பல முறை பொய்களை கூறினார். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும், அதே வித்தையை தொடர்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் கண்ணியத்தை கொடுத்துவிட்டார்.

அக்னிவீரர், விவசாயிகள், அயோத்தி, மைக்ரோபோன் விவகாரத்தில், தவறான அறிக்கையை அளித்துள்ளார்.

பொறுப்பான பதவியில் இருப்பதால், பொய் சொல்லிவிட்டு ஓட முடியாது. முன்னதாக வெளிநாட்டில் பேசிய அவர், இந்தியாவில் ஜனநாயகம் இல்லை.

இப்போது அவையில் ஹிந்துக்களை அவமதித்துள்ளனர்.

சபையை தவறாக பயன்படுத்தி, இஷ்டம் போல் பேசுவது கண்டிக்கத்தக்கது.

சீக்கியர் படுகொலை, எமர்ஜென்சி போன்றவையும் காங்கிரஸ் ஆட்சியில் தான் நடந்தது.

அப்படிப்பட்ட காங்கிரஸ், நாட்டை காப்பாற்றுவேன் என்று ஏதோ வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது எதிர்க்கட்சி நிலையில் இருக்கிறது.

ஹிந்துக்கள் குறித்த பேச்சுக்காக, நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தகுதியானவன் இல்லை

ஹிந்து என்றால் 'சர்வ ஜனா சுகினோ பவந்து'. ஹிந்து என்றால் உலகம் ஒரே குடும்பம்; ஹிந்து என்றால் இன்னல்களிலும் கடவுளை காண்பது. எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நான் தகுதியானவன் இல்லை என்பதை, தன் பேச்சிலேயே ராகுல் காட்டிவிட்டார்.

சி.டி.ரவி,

பா.ஜ., - எம்.எல்.சி.,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us